ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

சர்வர் பிரச்னையால் உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரம் யூ டியூப் சேவை முடங்கியிருந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்னை சரிஸ் செய்யப்பட்டதையடுத்து இணையதளம் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.
 | 

ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

சர்வர் பிரச்னையால் உலகம் முழுவதும் யூ டியூப் சேவை சுமார் 1 மணி நேரம் முடங்கியது. தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை சரிசெய்ததையடுத்து, மீண்டும் யூ டியூப் செயல்படத் துவங்கியுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது செல்போன் உபயோகிக்கும் நிலை வந்துவிட்டது. அதிலும், அனைவருடைய பொழுதுபோக்கிலும் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சிறந்த பொழுதுபோக்கு தளமான யூ டியூப் இணையதளம் இன்று சுமார் 1 மணி நேரமாக முடங்கியது. 

சர்வர் பிரச்னை காரணமாக யூ டியூப் இணையதளம் முடங்கியுள்ளதாகவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும்  யூ டியூப் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.  

இதையடுத்து தற்போது தொழில்நுட்ப பிரச்னை சரிசெய்யப்பட்டதையடுத்து, மீண்டும் யூ டியூப் இணையதளம் செயல்படத் துவங்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP