Logo

புற்றுநோய் சிகிச்சைக்கு செல்லும் வழியில் ரூ.1.42 கோடி லாட்டரி வென்ற அதிர்ஷடசாலி

வட கரோலினாவில் புற்று நோயாளி ஒருவர் அவரது கடைசி கீமோதெரபி முறைக்கு சென்று கொண்டிருந்தபோது 2,00,000 டாலர் மதிப்புள்ள லாட்டரியை வென்றுள்ளார்.
 | 

புற்றுநோய் சிகிச்சைக்கு செல்லும் வழியில் ரூ.1.42 கோடி லாட்டரி வென்ற அதிர்ஷடசாலி

வட கரோலினாவில் புற்று நோயாளி ஒருவர் அவரது கடைசி கீமோதெரபி முறைக்கு சென்று கொண்டிருந்தபோது 2,00,000 டாலர் மதிப்புள்ள லாட்டரியை வென்றுள்ளார்.  

வடகரோலினாவின் பிங்க் மலையைச் சேர்ந்தவர் ரோனி ஃபார்ஸ்டர். பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், கடைசி கிமோதெரபி மருத்துவசிகிச்சைக்கு செல்லும் வழியில் ஒரு பெட்ரோல்  பங்கில் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். முதல் லாட்டரி டிக்கெட்டில் 5 டாலர் வென்ற அவர், அதை வைத்து மேலும் இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். புதிய டிக்கெட்டில் ஒன்றை ஸ்கேரேட்ச் செய்த போது எதையும் வெல்லவில்லை. இரண்டாவது டிக்கெட்டை ஸ்கேரேட்ச் செய்தபோது உறைந்து விட்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், "2வது லாட்டரி டிக்கெட்டை ஸ்கேரேட்ச் செய்தபோது, அதில் இருந்த பூஜ்ஜியங்கள் அனைத்தையும் பார்த்து உறைந்துவிட்டேன்.  ஸ்கேன் செய்ய கவுண்டரில் உள்ள எழுத்தருக்கு நான் கொடுக்கும் வரை நான் அதை நம்பவில்லை. 'லாட்டரி தலைமையகத்திற்குச் செல்லுங்கள்' என்று காட்டியபோது, அதிர்ந்து விட்டேன், என்னால் நம்ப முடியவில்லை" என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தனது கடைசி சுற்று கீமோதேரபி சிகிச்சை முடியவுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த ஃபார்ஸ்டருக்கு,  200,000 டாலர் (ரூ.1.42 கோடி) வென்றது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாட்டரி தலைமையகத்திற்கு சென்று வரிகளை செலுத்திவிட்டு மீதி சுமார் ரூ.1கோடியை வீட்டிற்கு எடுத்துசென்றுள்ளார்.  பரிசு தொகையில் ஒரு பகுதியை மருத்துவ கட்டணங்களுக்கு செலுத்தவும், மீதியை சேமிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.  

வட கரோலினாவில் கல்வித் திட்டங்களை ஆதரிப்பதற்காக லாட்டரி மூலம் பணம் திரட்டப்பட்டதில், ஃபோஸ்டர் பரிசுதொகை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP