48 ஆண்டுகள் கழித்து பாடம் படிக்க பல்கலை செல்லும் முதியவர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேரந்தவர், டேவிட் கார்டர். தற்போது 70 வயதாகும் இவருக்கு சொந்தம் என யாரும் கிடையாது. இளமைப் பருவத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கடும் நோய் வாய் பட்ட இவர், 48 ஆண்டுகளுக்கு முன் தான் கைவிட்ட பட்டப்படிப்பை முடிக்க பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்துள்ளார்.
 | 

கடந்த, 1949ல் பிறந்த இவர், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் சேர்ந்து படித்து வந்தார். அப்போது, தவறான நண்பர்களுடன் சேர்ந்த சேர்க்கையால் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். அதன் விளைவாக நோய் வாய் பட்டு, கேட்பாரற்று கிடந்தார். சொந்த பந்தங்கள், வீடு என அனைத்தையும் இழந்த இவர், சாலையோரம் வசித்து வருகிறார். 

டெக்சாஸ் பல்கலையில் ஊடகவியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், தன் பிரஜெக்ட் சம்பந்தமாக டேவிட்டை சந்தித்து அவரின் சாேகக் கதையை கேட்டுள்ளார். அவரை மீட்டெடுக்க முயன்ற மாணவர், டேவிட்டின் விருப்பம் என்ன என கேட்டுள்ளார். 

அப்போது மாணவரிடம் பேசிய டேவிட், 48 ஆண்டுகளுக்கு முன் தான் கைவிட்ட பட்டப்படிப்பை மீண்டும் தொடர்ந்து படித்து, பட்டம் பெற விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவரின் உதவியுடன், பல்கலையில் மீண்டும் சேர்ந்துள்ளார் டேவிட். படிப்பு மீதான அவரின் ஆர்வத்தை அறிந்த பல்கலை நிர்வாகம், டேவிட்டின் படிப்பு செலவு மொத்தத்தையும் ரத்து செய்துள்ளது. 

இது தன் வாழ்வில் தனக்கு கிடைத்த செகண்ட் இன்னிங்ஸ் என்றும் இதில் சிறப்பாக ஆட முயற்சிப்பதாகவும் டேவிட் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP