Logo

வடகொரியா ஏவுகணை சோதனை...காரணம் இதுதானாம்!

2 குறைந்த தூற ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

வடகொரியா ஏவுகணை சோதனை...காரணம் இதுதானாம்!

குறைந்த தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக, தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைகள் 420 கிலோ மீட்டர் மற்றும் 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியவை என்றும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. சினோரி ஏவுதளத்தில் இருந்து ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டதாகவும் தென்கொரியா கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வடகொரிய ஏவுகணை சோதனை செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP