பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு...இந்தியருக்கும் நோபல் பரிசு

2019ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு...இந்தியருக்கும் நோபல் பரிசு

2019ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வறுமையை ஒழிக்கும் பொருளாதார திட்டங்களை வகுத்ததற்காக இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரான அபிஜித் பானர்ஜி, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி, டெல்லி நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ள மூவரில் அபிஜித், எஸ்தர் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் 2ஆவது பெண் எஸ்தர் டஃப்லோ ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP