அரசியலுக்கு வருவதில் விருப்பம் இல்லை - ஆர் நேதன்யாஹூ!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹூவின் மகன், அதனால் தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை எனவும், அரசியலில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பது இல்லை, அதற்கு பல்வேறு வழிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 | 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்ல்ட் வேல்யூஸ் நெட்வர்க் தலைமையகத்தில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹூவின் மகன் ஆர் நேதன்யாஹூவை பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்து விட்டனர்.

அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சமூக வலைதளங்களின் ப்ளாக்கர்கள், இஸ்ரேல் நாட்டின் பத்திரிகையாளர்களை விட நம்பகத்தன்மை கொண்டவர்கள் என்று கூறியுள்ளதோடு, தனக்கும் தன் குடும்பத்திற்கும் தினசரி சமூக வலைதளங்களில் வரும் கொலை மிரட்டல்கள் குறித்து கேள்விகள் எழுப்ப அவர்களுக்கு நேரமில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இதை தொடர்ந்து, இத்தகைய மிரட்டல்களுக்கு பதிலளிக்க உதவியாக உள்ள ட்விட்டருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஓர் அரசியல் சிந்தனை கொண்டவர் என்றாலும், மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்குள் குதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், அதற்கான நல்ல மனது இருந்தால், பல வகைகளில் அவர்களுக்கு உதவ முடியும் என்ற தன் கருத்தையும் முன் வைத்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP