நைஜீரியா: போலீசாரை சுட்டுக்கொன்று எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்

நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்றுவிட்டு, இரண்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

நைஜீரியாவின் ரிவர்ஸ்சில் இயங்கிவரும் ஷெல் எண்ணெய் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம் பாயேல்சா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென வழிமறித்தனர். இதனை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், 2 போலீஸ் அதிகாரிகளையும் சுட்டுக்கொன்று விட்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் இரண்டு பேரையும் கடத்திச்சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட ஊழியர்களின் தற்போதைய நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை ஷெல் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP