Logo

நியூசிலாந்து தாக்குதல் குற்றவாளிக்கு ஏப்., 5 வரை சிறை 

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, 49 பேர் சாவுக்கு காரணமாக இருந்த, ஆஸ்திரேலியாவை சேர்ந்த, பிரன்டன் ஹாரிசன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஏப்., 5 வரை அவனை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
 | 

நியூசிலாந்தில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில், 49 பேர் பலியாகினர்; பலர் படுகாமயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, ஆஸ்திரேலியாவை சேர்ந்த, பிரன்டன் ஹாரிசனை, அந்நாட்டு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 

கையில் விலங்கிட்டபடி, வெறும் கால்களுடன், சிறைக் கைதிகளுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி உடை அணிவித்து, பிரன்டன் ஆஜர்படுத்தப்பட்டான். வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அவன் வாய் திறக்காமல் மவுனம் காத்தான். அடுத்த விசாரணையை, ஏப்., 5ம் தேதிக்கு ஒத்தி வைத்த கோர்ட், அதுவரை, பிரன்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பிரன்டன் ஹாரிசன் சிறையில் அடைக்கப்பட்டான். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP