முஸ்லீம் மதத்தை போதிக்கும் வகையில் புதிய சேனல்: இம்ரான் கான்

பாகிஸ்தான், துருக்கி மற்றும் மலேசியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முஸ்லீம்களுக்கான புதிய தொலைகாட்சி சேனல் ஒன்றை தொடங்க போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
 | 

முஸ்லீம் மதத்தை போதிக்கும் வகையில் புதிய சேனல்: இம்ரான் கான்

பாகிஸ்தான், துருக்கி மற்றும் மலேசியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முஸ்லீம்களுக்கான புதிய தொலைகாட்சி சேனல் ஒன்றை தொடங்க போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

74 வது ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக நியூயார்க் நகரம் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லீம் இன மக்கள் அதிகம் உள்ள நாடுகளான துருக்கி மற்றும் மலேசியா நாட்டு தலைவர்களை கண்டு உரையாடினார். முஸ்லீம் மதத்தின் ஒரு சில  நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாகவும், அதை மாற்றியமைக்க எண்ணி, மூன்று நாடுகளும் சேர்ந்து புதியதொரு சேனலை தொடங்க போவதாகவும் முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

"முஸ்லீம்களின் பல நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் உலக பார்வைக்கு தவறானதாகவே தோன்றுகிறது. இந்த கண்ணோட்டத்தை மாற்ற வேண்டுமெனில் முஸ்லீம் மதத்தை பற்றி முழுமையாக அறியப்பட வேண்டும். அதற்காகவே இந்த சேனலை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். 

முஸ்லீம் மதத்தை குறித்த தொடர்களும், படங்களும் காட்டப்படும் நிலையில், இந்த இனத்தின் உண்மையான நோக்கத்தை உலக மக்கள் அனைவருக்கும் எடுத்துக்கூற இயலும். மேலும், இந்த சேனலை ஆங்கிலத்தில் தொடங்க முடிவு செய்துள்ளதால், இது அனைத்து வகை மக்களையும் சென்றடையும் என நாங்கள் நம்புகிறோம்" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP