ரகசியங்களை உளவு பார்த்ததாக புகார்: மியான்மர் நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை

மியான்மர் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை உளவுப் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ரகசியங்களை உளவு பார்த்ததாக புகார்: மியான்மர் நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை

மியான்மர் நாட்டின் ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நிருபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் மியான்மர் ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர்களான வாலோன் (வயது 32) மற்றும் குயாசோ ஓ (வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை போலீசாரிடம் இருந்து பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அவர்கள் மீது அதிகார ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய மியான்மர் நீதிமன்ற நீதிபதி, "இரண்டு நிருபர்களும் நாட்டின் பெரிய ரகசித்தை போலீசாரிடம் இருந்து பெற்றுள்ளனர். மேலும் அவற்றை நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் உட்பட பலருக்கும் பகிரவும் திட்டம் தீட்டி உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களை 7 ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என்று கூறினார். 

இரு நிருபர்களும் கைது செய்யப்பட்ட போது ரக்கேன் ரோஹிங்யா இஸ்லாமியர் 10 பேர் கொல்லப்பட்டது குறித்து செய்தி சேகரித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பேசி உள்ள ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஸ்டீஃபன் அட்லர், "இன்று துக்க தினம். உண்மையை வெளிக்கொண்டு வந்த இரு நிருபர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என்று வருத்தம் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP