என்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம்- அதிபர் மைத்திரிபால சிறிசேன

எனக்கு இரு விஷயங்கள் இல்லாமல் போகலாம். அதில் ஒன்று பதவி, இன்னொரு உயிர். இதில் இரண்டில் ஒன்றை இழக்கலாம். அல்லது இரண்டும் இல்லாமல் போகக்கூடும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 | 

என்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம்- அதிபர் மைத்திரிபால சிறிசேன

2 விஷயங்கள் எனக்கு இல்லாமல் போகும். மிகவும் சந்தோசத்துடன் நான் அவற்றை ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு இல்லாமல்போகும் இரு விஷயங்களில் ஒன்று என்னுடைய பதவி. அடுத்தது என்ன? இரண்டாவது என்னுடைய உயிர். இரண்டில் ஒன்றை இழக்கலாம். அல்லது இரண்டும் இல்லாமல் போகக்கூடும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும் நேற்று இலங்கையில் நடைபெற்ற நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்துள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேன, “கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தேர்வு செய்தார்கள். அன்று காணப்பட்ட பிரச்சினைகளின்படி, நான் சரியான பாதையை தான் தேர்வுசெய்தேன். அன்று நான் எடுத்த தீர்மானம் சரி என்பதனை இன்றும் கூறுவேன். இந்த நாட்களில் எவ்வாறெல்லாம் என் மீது விமர்சனங்கள் முன்வைக்கின்றார்கள் என நான் பார்த்தேன். 

தாய்நாட்டிற்கு சிறந்த அரசியல் எதிர்காலத்தைக் கொண்டுவருவதற்காகவே நான் இருக்கிறேன் என்பதனைத் தெளிவாக கூறிக்கொள்கிறேன். என்னை கெட்டவராக காட்ட முயற்சிப்பவர்கள் நாளை அல்லது எதிர்காலத்தில் நான் சிறந்த மனிதன் என்பதனை அறிந்துகொள்வார்கள்.

 இந்தப் போரில் 2 விஷயங்கள் எனக்கு இல்லாமல் போகும். மிகவும் சந்தோசத்துடன் நான் அவற்றை ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு இல்லாமல்போகும் இரு விஷயங்களில் ஒன்று என்னுடைய பதவி. அடுத்தது என்ன? இரண்டாவது என்னுடைய உயிர். இரண்டில் ஒன்றை இழக்கலாம். அல்லது இரண்டும் இல்லாமல் போகக்கூடும். இந்தப் போரில் நான் தனி ஆள் இல்லை என தெரியும். அரசியல்வாதிகளை நம்பி இதனை நான் கூறவில்லை. எதிர்காலத்தில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்பிக்கை வைத்துள்ள இலங்கை மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இலங்கையில் உள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் சவால் விடுக்கிறேன். யார் சரி யார் பிழை என நாட்டிற்காக தெளிவூட்டுவதற்கு என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள். நான் தயார். தூய்மையானவர்களுக்கு அசுத்தமானவர்களின் சவால் தேவையில்லை. நான் அதிகாரத்தில் வந்த நபர் அல்ல. அதிகாரத்தில் இருந்து வெளியேற விரும்பும் ஒருவர். இருக்கும்போது செய்ய வேண்டியதை செய்து விட்டு சந்தோசமாக செல்லும் நபர்” என தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP