இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் - அவதிகுள்ளாகும் இஸ்ரேல் மக்கள் !!!

பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் தலைவனான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இன்று இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏவுகணை தாக்குதல்களினால் மக்கள் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
 | 

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் - அவதிகுள்ளாகும் இஸ்ரேல் மக்கள் !!!

பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இன்று இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏவுகணை தாக்குதல்களினால் மக்கள் பலரும் படுகாயமடைந்துள்ளனர். 

இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடா, இஸ்ரேலுக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதல்களும், ஏவுகணை தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளார். இவரின் தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் அமைதியை வெகுவாக பாதித்துவந்தது இவரின் தொடர்ச்சியான தாக்குதல்கள். இதனால், அந்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகபெரும் அச்சுறுத்தலாக அபு அல் அடா இருப்பார் என்று கருதிய இஸ்ரேல் அரசு அவரை அழிக்க தீர்மானித்தது. 

இதை தொடர்ந்து, இஸ்ரேலின் ஐடிஎப்-ன் தலைவர் ஷின் பெட், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ மற்றும் பாதுகாப்பு அமைச்சர்  மூவரும் இணைந்து பஹாத் அபுவிற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதை தொடர்ந்து, இஸ்ரேலின் காசா ஸ்ட்ரிப் பகுதியில் அமைந்திருக்கும் ஓர் கட்டிடத்தில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, அந்நாட்டின் விமானப்படையினர் அந்த கட்டிடத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில், இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவர் பஹாத் அபு அல் அடா உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து, இஸ்ரேலின் ஆஷ்கிலான், ஆஷ்தோத், கிதேரா போன்ற பகுதிகளில் இன்று காலை ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பலரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அபு அல் அடாவுக்கு எதிரான தாக்குதலில் வெற்றிபெற்று சிறு நிம்மதி மூச்சு விடலாம் என்று எண்ணிய இஸ்ரேல் அரசை மீண்டும் கலவரத்திற்கு உள்ளாக்கியுள்ளது இச்சம்பவம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP