Logo

#MeToo விவகாரம்: போராட்டத்தில் குதித்த கூகுள் ஊழியர்கள்!

மீடூ விவகாரம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில்,கூகுள் நிறுவனம் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
 | 

மீடூ மூலம் பல பெண்கள் தங்களுக்க நேர்ந்த பாலியல் தாக்குதல்களை கூறி வருகின்றனர். தொடக்கத்தில் சினிமா மற்றும் பத்திரிகை துறைகளில் மட்டுமே எழுந்த குற்றச்சாட்டு, தற்போது பிரபல நிறுவனமான கூகுளிலும் இத்தகைய பிரச்னை இருப்பது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூகுளில் பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, பாலியல்  தொல்லை கொடுக்கும் ஊழியர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவித்திருந்தார். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் உயரதிகாரிகள் உட்பட 28 பேர் பதவி நீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில்     இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள குர்கான், ஐதராபாத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஷீரீச், டியூப்ளின், பெர்லின், சிங்சப்டர், லண்டன் உள்ளிட்ட நகரங்களிள் உள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதுமட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான கலிபோர்னியாவின் மவுன்டெயின் வியூ பகுதியிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP