மசூத் அசார் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ஜெய்ஷ் ஈ முஹம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது தடை விதிக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், ஐநா-வின் கட்டமைப்பை பாதிக்கும் என சீனா எச்சரித்துள்ளது.
 | 

மசூத் அசார் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ஜெய்ஷ் ஈ முஹம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது தடை விதிக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், ஐநா-வின் கட்டமைப்பை பாதிக்கும் என சீனா எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜெய்ஷ் ஈ முஹம்மது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை இந்த முயற்சியை சீனா தடுத்துள்ளது. இந்த நிலையில், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மீண்டும் மசூத் அசார் மீது தடை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. மீண்டும், அதை சீனா தடுத்தது. இதுகுறித்து ஆலோசிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சீனா தரப்பில் கூறப்பட்டது. 

இந்த நிலையில், சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மசூத் அசார் மீது சர்வதேச தடை விதிக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆதரவுடன், புதிய தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ, சீனாவுக்கு கண்டனம் விடுத்துள்ளார். அப்பாவி இஸ்லாமியர்களை தங்கள் நாட்டில் சீனா ஒடுக்கிவரும் நிலையில், சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த ஐநா தீர்மானம் மிகவும் ஆபத்தானது என சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்கா இந்த தீர்மானத்தை மற்ற உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி புகுத்துவதாகவும், இது ஐநா-வின் கட்டமைப்பை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது சீனா. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் பேசியபோது, "இது பேச்சுவார்த்தைக்கு எதிராக செல்வதாகும். ஐநாவில் தீவிரவாதத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் முக்கியமான அமைப்பின் அதிகாரத்தை இந்த நடவடிக்கை கீழ் இறக்குவது போல உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை இதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், இதில் அவர்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கட்டாயப்படுத்தி இந்த தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP