மல்லையா மனு மீண்டும் தள்ளுபடி

மாேசடி மன்னன் விஜய் மல்லையா, லண்டன் கோர்ட் தனக்கு பிறப்பித்த நாடு கடத்தல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, பிரிட்டன் கோர்ட் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
 | 

மல்லையா மனு மீண்டும் தள்ளுபடி

லண்டன் கோர்ட் தனக்கு பிறப்பித்த நாடு கடத்தல் உத்தரவை எதிர்த்து மாேசடி மன்னன் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை,பிரிட்டன் கோர்ட் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களுரை சேர்ந்த பிரபல கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில், பல ஆயிரம் கோடி ருபாய் கடன் தொகையை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றான். 

லண்டனில் இருக்கும் மல்லையாவை கைது செய்து நாடு கடத்த, சர்வதேச போலீசின் உதவியை, இந்திய அரசு நாடியது. அதன் பலனாக, மல்லையா, லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டான். 

ஜாமினில் வெளியான மல்லையாவை நாடு கடத்த, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதன் பலனாக, மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் அரசு சம்மதம் தெரிவித்தது. இதை எதிர்த்து, மல்லையா சார்பில், லண்டன் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இ்ந்நிலையில், தான் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க, மல்லையா மீண்டும் லண்டன் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தான், தற்போது, அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP