கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் மலேசியா

கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதற்கு ஆசிய நாடுகளிலே முதல் முறையாக மலேசியா அனுமதி வாங்கவுள்ளது.
 | 

கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் மலேசியா

கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதற்கு ஆசிய நாடுகளிலே முதல் முறையாக மலேசியா அனுமதி வாங்கவுள்ளது. 

மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இளைஞருக்கு மலேசியாவில் கடந்த மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கஞ்சாவை அந்நாட்டில் மருத்துவத்திற்கு பயன்படுத்த சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது குறித்தும் பேசப்பட்டதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP