காரில் சென்ற போது மேக்அப்: பெண்ணின் கண்ணுக்குள் சிக்கிகொண்ட பென்சில்

தாய்லாந்து நாட்டில் காரில் சென்று கொண்டு இருந்த போது மேக்அப் போட்ட பெண்ணின் கண்ணில் பென்சில் சிக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
 | 

காரில் சென்ற போது மேக்அப்: பெண்ணின் கண்ணுக்குள் சிக்கிகொண்ட பென்சில்

தாய்லாந்து நாட்டில் காரில் சென்று கொண்டு இருந்த போது மேக்அப் போட்ட பெண்ணின் கண்ணில் பென்சில் சிக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

தாய்லாந்து பாங்காக் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் வாடகை டாக்சியில் சென்று கொண்டு இருந்த போது மேக்அப் போட்டுக்கொண்டே பயணித்துள்ளார். அப்போது எதிரே வந்த வாகனம் மீது அவர் சென்ற டாக்சி மோதி உள்ளது. இரு வாகனங்கள் இடித்துக்கொண்ட வேகத்தில் அந்த பெண்ணின் கையில் இருந்த ஐலைனர் பென்சில் அவர் கண்ணுக்குள் குத்தி உள்ளது. 

அதை பார்த்து அதிர்ந்து போன டாக்சி ஓட்டுநர். உடனே அருகே இருந்த மருத்துவமனைக்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை எதுவும் இன்றி கண்ணில் சிக்கிய பென்சிலை எடுத்துள்ளனர். இதில் அவர் கண்ணில் இருந்து ரத்தம் வரவில்லை என்றும் அவர் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP