இந்த பெண்ணிற்கு யார் மீது காதல் தெரியுமா?...தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்...!

போயிங் ஜெட் உடனான எனது உறவு, மனிதர்களின் காதல் போன்றது தான் என்று மகிழ்ச்சியுடன் தன் காதல் கதையினை கூறும் மைக்கெல் கோப்கே, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
 | 

இந்த பெண்ணிற்கு யார் மீது காதல் தெரியுமா?...தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்...!

"போயிங் ஜெட் உடனான எனது உறவு, மனிதர்களின் காதல் போன்றது தான்" என்று மகிழ்ச்சியுடன் தன் காதல் கதையினை கூறும் மைக்கெல் கோப்கே, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

யாருடனும் பகிராத, யாரையும் தொட அனுமதிக்காத பொருள் என நம் அனைவரது வாழ்விலும் நிச்சயம் ஒன்றாவது இருக்கும். நமது குழந்தை பருவம் தொட்டு இறக்கும் நாள் வரை அவற்றை பொக்கிஷமாக பாதுகாக்கும் பலரையும் நாம் நம் தினசரி வாழ்வில் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், மைக்கெல் கோப்கே, இவை அனைத்திற்கும் ஒரு படி மேலே போய், "போயிங் 737-800" ஜெட்டை தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.

ஜெர்மனியின் பெர்லிங்கை சேர்ந்த 30 வயது மைக்கெல் கோப்கே, "போயிங் 737-800" ஜெட்டை கடந்த ஐந்து வருடமாக காதலித்து வருகிறார். போயிங் ஜெட் குறித்து அவர் கூற்கையில், "விமானங்களின் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு இருந்தது. விமானங்களுடனே நேரத்தை கழிக்கும் எனக்கு ஒரு போதும் அவை சலித்து போனதில்லை. மாறாக,  கண்ட முதல் நொடியே எனக்கு போயிங் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. உலகிலேயே எனக்கு போயிங் ஜெட் தான் மிக அழகாக தெரிகிறான். அவனுடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நான் மகிழ்ச்சியாக வாய் வலிக்க சிரித்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் இருவருக்கமிடையான உறவு, மனிதர்களின் காதல் போன்றது தான். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள காதலை என் பெற்றோரிடமும் கூறிவிட்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். வெகு விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறோம்" என்று வெட்கத்துடன் கூறுகிறார் கோப்கே.

இந்த பெண்ணிற்கு யார் மீது காதல் தெரியுமா?...தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்...!

போயிங்குடன் அதிக நேரம் செலவிட முடியாததால், அதன் உருவ மாடல் ஒன்றை சிறிதாக செய்து, அதனுடன் தான் உறங்குகிறார் மைக்கில் கோப்கே.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP