14 விமான சேவையை ரத்து செய்த ஜெட் ஏர்வேஸ்!

இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 14 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதற்கு விமானிகளுக்கு பாக்கி வைக்கப்பட்டிருக்கும் சம்பளப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 | 

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது மூத்த அதிகாரிகளுக்கும் விமானிகள் பலருக்கும் சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஜெட் ஏர்வேஸ் மறுத்தது. இந்நிலையில் தற்போது 14 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதியிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மேலும் ஜெட் ஏர்வேஸ் நிவாரணம் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தவில்லை என்பது உண்மையே என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் ரூபாய்க்கு கடனில் உள்ளது, அதன் சொத்துகளை மீட்க மத்திய அரசு போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP