காஸா தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி!

இஸ்ரேல் நாட்டில் விரைவில் பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காஸா பயங்கரவாதிகள் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு, இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
 | 

காஸா தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி!

இஸ்ரேல் நாட்டில் விரைவில்  பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  காஸா பயங்கரவாதிகள்  நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு, இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தேர்தல் பிரசாரம் செய்ய தெற்கு இஸ்ரேலைச்  சேர்ந்த அஷ்தோத் நகருக்குச் சென்றிருந்தார். பிரசாரம் தொடங்கிய சிறிது நேரத்தில், சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நிகழ்ந்ததால்,  பிரச்சாரம் பாதியில் நிறுத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் நடந்த அஷ்தோத் மற்றும் ஆஷ்கிலான் நகரங்களில் காஸா பயங்கரவாதிகள் தாக்கதல் நடத்தியது தெரிய வந்தது. 

இதையடுத்து, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், காஸா பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள 15 முக்கிய இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், காஸா பயங்கரவாத அமைப்பினரின் பதுங்கு குழிகள், அவர்களின் கூடாரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

தேர்தலை மனதில் வைத்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தவே காஸா படையினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP