பயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி!!

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஏவுகணை தாக்குதல்களினால் அதிருப்தியடைந்த இஸ்ரேல் அரசு மறுதாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
 | 

பயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி!!

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஏவுகணை தாக்குதல்களினால் அதிருப்தியடைந்த இஸ்ரேல் அரசு மறுதாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 

ஈரானின் ஆதரவுடன் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு, இஸ்ரேலுக்கு எதிரான பல தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இதனால் மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவ்வமைப்பின் தலைவனான பஹாத் அபு அல் அடா மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவம் அவரை கொன்றுவிட்டது. 

இவரது இழப்பை தொடர்ந்தும், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஏவுகணை தாக்குதல்களினால் இஸ்ரேலில் பல அப்பாவி மக்களும் காயமடைந்து வரும் நிலையில், நேற்று மறுதாக்குதலில் ஈடுபட்டது இஸ்ரேல். ஜெட் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹமாஸ் அமைப்பின் முகாம்களை தாக்கியதுடன், கடற்படை தளத்தையும் தாக்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். 

இது குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், "தாக்குதல்களை நிறுத்தி கொள்ளுமாறு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தும், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் ஹமாஸ் அமைப்பினர். இவர்களின் இந்த தாக்குதல்களினால் 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலி மக்கள் காயமடைந்துள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் தற்போதைய மறுதாக்குதலில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், பயங்கரவாதிகளின் தொடர் ஏவுகணை தாக்குதல்களினால் இஸ்ரேலின் தெற்கு பகுதியிலிருந்து வடக்கிலுள்ள அவிவ் பகுதி வரையிலான பள்ளிகள் கடந்த சில நாட்களாக திறக்கப்படாமலேயே உள்ளன. இதை தொடர்ந்து, மக்களின் தினசரி வாழ்வையும் இந்த தாக்குதல்கள் வெகுவாக பாதித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP