நள்ளிரவில் நடந்த வான்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம்: சிரியா

சிரியாவில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளியன்று நடத்த அமெரிக்க ராணுவ தாக்குதலில் 70 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நள்ளிரவில் நடந்த வான்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம்: சிரியா

சிரியாவில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் தமாஸ்கஸ் பகுதியில் இருக்கும் தெற்கு கிஸ்வாவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமாஸ்கஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் அரசு தரப்பில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து தெரிவித்த சிரியா ராணுவம், வியாழன் அன்று நடத்தப்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது என்றும் வெள்ளிக்கிழமை கிழக்கு சிரியா பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது என்றும் கூறியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகி உள்ளனர். 

சிரியாவில் உள்நாட்டு பிரச்னை தொடர்வதற்காகவே இஸ்ரேல் இந்த தாக்குதல் நடத்தி உள்ளது என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP