பயங்கரவாதத்திற்கு நிதி உதவியா : திருந்தவில்லையா பாகிஸ்தான் ??

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் சாம்பல் நிறப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை நிறுத்தவில்லை பாகிஸ்தான் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புதுறை.
 | 

அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புதுறை தற்போது வெளியிட்டுள்ள "கண்ட்ரி ரிப்போர்ட்ஸ் ஆன் டெரரிஸம் 2018" என்ற அறிக்கையில், மிகப்பெரிய பயங்கரவாத அமைப்புகளான லாஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இன்னும் நிதியுதவி செய்துகொண்டுதான் இருக்கிறது பாகிஸ்தான் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து குறிப்பிட்டுள்ள யுஎஸ் அறிக்கையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்துவரும் பாகிஸ்தான், அவர்களை அரசியல் உலகிலும் விளையாட அனுமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. (இம்ரான் கான் பிரதமரான 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தலில், மில்லி முஸ்லீம் லீக்-ஐ தோற்றுவித்த, அமெரிக்காவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஹஃபீஸ் முஹமது சயீத் தேர்தலுக்கான போட்டியாளர்களை களமிறக்கியுள்ளார்).

இதை தொடர்ந்து, ஆப்கான் தலிபான், ஹக்கானி அமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த தவறிய பாகிஸ்தான், பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் சாம்பல் நிறப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச நிதியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் சாம்பல் நிறப்பட்டியலில் உள்ள பாகிஸ்தான், கருப்பு நிறப்பட்டியலுக்கு மாற்றப்பட்டால், சர்வதேச பொருளாதார நிதி வங்கிகள் எதிலிருந்தும் உதவிகள் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP