பொது இடத்தில் ஹெச்ஐவி பரிசோதனை செய்துகொண்ட அயர்லாந்து பிரதமர்

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி தலைநகர் டூப்ளினில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு சென்ற அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் வகையில் ஹெச்ஐவி பரிசோதனை மேற்கொண்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
 | 

பொது இடத்தில் ஹெச்ஐவி பரிசோதனை செய்துகொண்ட அயர்லாந்து பிரதமர்


வரலாற்றிலேயே முதல் முறையாக அயர்லாந்து பிரதமர் பொது இடத்தில் ஹெச்ஐவி பரிசோதனை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

வழக்கம்போல் நடப்பாண்டிலும் உலகம் தழுவிய அளவில் உலக எய்ட்ஸ் தினம் கடந்த 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இளைய சமுதாயத்தினர் பலர் ஹெச்.ஐ.வி நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.  1988ம் ஆண்டு முதல் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில், எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை மக்களிடையே சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 12,778 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 2017 முதல் 2018ம் ஆண்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இதில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதிகமானோருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2016 வரை, 10 முதல் 19 வயதுடையவர்களில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு 160 பேருக்கு மட்டுமே இருந்த நிலையில், 2017- 2018ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 187-யாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2018 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 99 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் அதுமட்டுமின்றி நோய் ரகசியமாக இருக்க வேண்டும் என நினைப்பர். இந்நிலையில் அயர்லாந்து பிரதமர் பொது இடத்தில் ஹெச்ஐவி பரிசோதனை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி தலைநகர் டூப்ளினில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு சென்ற அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் வகையில் ஹெச்ஐவி பரிசோதனை மேற்கொண்டார். மேலும் அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.  பரிசோதனையில் ஒரே ஒரு நீல நிற புள்ளி தென்பட்டதால், முடிவு ஹெச்ஐவி நெகட்டிவ் என வந்ததுள்ளது. மேலும் நோய் தாக்கம் தொடர்பான விவகாரத்தில் எந்த ரகசியமும் காக்கப்பட கூடாது என்றும் லியோ வலியுறுத்தினார்.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP