ஈராக்:  பயங்கரவாத தலைவன் சுலைமான் சுட்டுக்கொலை !

ஈராக்கில் நடைபெற்ற ராணுவ அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் சுலைமான் அகமது முகைதின் சுட்டுக்கொல்லப்பட்டான்.
 | 

ஈராக்:  பயங்கரவாத தலைவன் சுலைமான் சுட்டுக்கொலை !

ஈராக்கில் நடைபெற்ற ராணுவ அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் சுலைமான் அகமது முகைதின் சுட்டுக்கொல்லப்பட்டான். 

அன்பர் மாகாணத்தின் ரமாடியில் உள்ள அல்-ரசாசா என்ற பகுதியில், பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவனை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.  இந்த தகவலை ஈராக் ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும், சுலைமான் அகமது முகைதின் அன்பர் மாகாணத்தில் ஏராளமான உயிர்களை பலிவாங்கிய பல்வேறு தாக்குதல்களுக்கு மூலகாரணமாக இருந்தவன் எனவும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP