அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் : பொருளாதார தடை விதிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் - மைக் பாம்பியோ கோரிக்கை!!

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டுமெனில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ, அதை செயல்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
 | 

அணு ஆயுத தயாரிப்பில், அதன் உற்பத்திக்கு தேவைப்படும் யுரேனியம் அல்லது ப்ளூட்டோனியம் ஆகியவற்றை மிகப்பெரிய அளவில் தேக்கி வைப்பதுதான் மிகப்பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த சவாலை கடந்து, அதன் சேமிப்பை தற்போது தொடங்கியுள்ள ஈரான், அணு ஆயுத தயாரிப்பையும் தொடங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்காவை சேர்ந்த மைக் பாம்பியோ, அந்நாட்டின் தயாரிப்பை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

அணு ஆயுத தயாரிப்பிற்கு முன்னரே பல வகையான சர்ச்சைக்குரிய நியாயமற்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ஈரான், இந்த அணு ஆயுத தயாரிப்பை தொடர்ந்து மிகவும் தைரியமாக செயலாற்ற தொடங்கும் என்பதால், அதன்மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்றும், அதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP