யூத மதத்தவர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல - அயதுல்லா கமேனி!!!

ஈரான் : யூதர்களுக்கு எதிரான செயல்களில் ஈரான் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்ததை தொடர்ந்து, யூதர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல என்று கூறியுள்ளார் ஈரான் நாட்டின் தலைவர்களுள் ஒருவரான அயதுல்லா அலி கமேனி.
 | 

யூத மதத்தவர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல - அயதுல்லா கமேனி!!!

ஈரான் : யூதர்களுக்கு எதிரான செயல்களில் ஈரான் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்ததை தொடர்ந்து, யூதர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல என்று கூறியுள்ளார் ஈரான் நாட்டின் தலைவர்களுள் ஒருவரான அயதுல்லா அலி கமேனி.

இஸ்ரேலில் வசிக்கும் யூதர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது ஈரான். இதை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது என்றும், அவர்கள் தனிபட்ட முறையில் எந்த மதத்தையும் தாக்கி பேசவில்லை என்றும் கூறியுள்ளார் தெஹரானில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் ஒற்றுமை கூட்டத்தில் உரையாற்றிய ஈரானின் தலைவர்களுள் ஒருவரான அயதுல்லா அலி கமேனி. 

"இஸ்ரேல் என்ற நாடு வேண்டாம் என்பதன் பொருள் அதன் மக்கள் வேண்டாம் என்பதல்ல, இஸ்ரேலில் திணிக்கப்பட்டிருக்கும் ஆட்சியை தான் நாங்கள் வேண்டாம் என்று குறிப்பிடுகிறோம். இஸ்ரேல் அரசு இல்லையெனில் அங்கு வசிக்கும் மக்கள், எந்த மதத்தவராயினும் தங்களுகென்ற ஓர் அரசை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்" என்று கூறிய அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மக்கள் பெஞ்சமின் நேதன்யாஹூ போன்றவர்களின் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, எல்லா நாடுகளுக்கும் அமைதியான அணு;க்தி தேவையாக இருக்கிறது, ஆனால், மேற்கத்திய நாடுகள் அதை தங்களுக்கென்று மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றனர் என்று பதிலளித்துள்ள அலி கமேனி, எங்களது மத கொள்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராக இருப்பதால் நாங்கள் அணு ஆயுதங்களை ஒருபோதும் நாடியதில்லை என்று அதன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP