Logo

அணு ஆயுத தயாரிப்பினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் ஈரான் - பெஞ்சமின் நேதன்யாஹூ !!

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டுமெனில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோவின் கருத்தை தொடர்ந்து, ஈரானின் செயல்களுக்கு எதிகாக கடுமையாக எச்சரித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.
 | 

அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான யுரேனியம் அல்லது ப்ளூட்டோனியத்தின் சேமிப்பை தொடங்கியுள்ள ஈரான், அணு ஆயுத தயாரிப்பையும் மேற்கொண்டு வருவதால், அதன் மீது பொருளாதார தடை நடவடிக்கை மேற்கொள்ள சர்வதேச நாடுகளின் ஆதரவை கோரியிருந்தார் அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ.

இவரின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சர்வதேச அணுசக்தி நிறுவனமும், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை உறுதிப்படுத்தியுள்ளதை தொடர்ந்து, தான் ஓராண்டிற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் குறிப்பிட்டது தற்போது உண்மையாகி விட்டது என்று கூறியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.

இந்நிலையில், "தனது அணு ஆயுத உற்பத்தியை பல ஆண்டுகளாக ரகசியமாக மேற்கொண்டிருந்த ஈரானின் செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அணு பரவல் ஒப்பந்ததிற்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈரான் தனது பார்வையை சரி செய்து நேர் பாதைக்கு திரும்பும் வரை, சர்வதேச நாடுகள் அனைத்தும் அந்நாட்டிற்க அழுத்தம் தருவது மிகவும் அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார் நேதன்யாஹூ.

இவரை தொடர்ந்து, " தங்களின் நிலைபாடுகளிலிருந்து சற்றும் மாற தயாராக இல்லாத ஈரான், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்றும், அதன் அணு ஆயுத தயாரிப்பை முழுவதுமாக தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து முன் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் இஸ்ரேல் நாட்டின் ப்ளு அண்ட் வைட் கட்சியின் தலைவரான பென்னி காண்ட்ஸ்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP