Logo

இறைச்சியை 2 நாட்கள்வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

நன்யாங் தொழில்நுட்ப பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட தொடர் ஆய்வை அடுத்து இயற்கையாகப் பதப்படுத்தும் பொருளை கண்டுப்பிடித்துள்ளனர்.
 | 

இறைச்சியை 2 நாட்கள்வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகல் இருக்க இயற்கையான பதப்படுத்தும் பொருளை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். 

சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட தொடர் ஆய்வை அடுத்து இயற்கையாகப் பதப்படுத்தும் பொருளை கண்டுப்பிடித்துள்ளனர். இது பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்களைக் காட்டிலும் 8 மடங்கு கூடுதலாக உணவு கெடாமல் பாதிகாக்கிறது. ரொட்டியைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட்டில், சில செடிகளில் காணப்படும் மரபணுக்களைப் புகுத்தியதன் மூலம் இந்த இயற்கையான பதப்படுத்தும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக இறைச்சி சராசரியாக 6 மணி நேரத்திற்குள் கெட்டுப்போகும், ஆனால் இந்த பதப்படுத்தம் பொருளை புகுத்தியதன் மூலம் 2 நாட்கள் வரை இறைச்சி கெடாமல் இருக்கும். இந்த பதப்படுத்தும் பொருளை சந்தையில் அறிமுகப்படுத்த பன்னாட்டு நிறுவனங்களுடன் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழக ஆய்வுக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதன்மூலம் இறைச்சி மட்டுமின்றி பழங்கள், மற்ற உணவுப் பொருட்கள், காய்கறிகள், குளிர்பானங்கள் என அனைத்தையும் பதப்படுத்தலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP