நேற்று தொடங்கியுள்ள இந்திய-ஜப்பான் விமானப்படையினரின் "ஷின்யூ மைத்ரி" பயிற்சி

இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படையினர் இணைந்து மேற்கொள்ளும் "ஷின்யூ மைத்ரி" பயிற்சி, கொல்கத்தாவில் நேற்று தொடங்கியுள்ளது.
 | 

நேற்று தொடங்கியுள்ள இந்திய-ஜப்பான் விமானப்படையினரின் "ஷின்யூ மைத்ரி" பயிற்சி

இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படையினர் இணைந்து மேற்கொள்ளும்  "ஷின்யூ மைத்ரி" பயிற்சி, கொல்கத்தாவில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரின் பன்னாகர்ஹ் அர்ஜன் சிங் விமான தளத்தில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இருநாடுகளும் "ஷின்யூ மைத்ரி"  எனப்படும் விமானப்படையினருக்கான பயிற்சியை நேற்று தொடங்கியுள்ளனர்.

ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த பயிற்சியில், இந்தியாவின் சி-130ஜெ போர் விமானமும், ஜப்பானின் சி-130ஹெச் போர் விமானமும் பங்குபெறுவதாக தகவல்கள் கூறுகின்றன. 

இருதரப்பினரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த பயிற்சியை தொடர்ந்து, "தர்மா கார்டியன்" எனப்படும் இந்திய ராணுவ வீரர்களுக்கான இவ்வாண்டின் பயிற்சி, மிசோரம் மாநிலத்தில் தொடங்கவிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய மற்றும் ஜப்பான் விமானப்படையினர் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் "ஷின்யூ மைத்ரி" நேற்று (அக்டோபர் 17) தொடங்கி அக்டோபர் 23 அன்று முடிவடை இருப்பதாகவும், அதை தொடர்ந்து, வரும் அக்டோபர் 19 முதல் நவம்பர் 2 வரை இந்திய ராணுவ வீரர்களுக்கான "தர்மா கார்டியன்" பயிற்சி நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP