அமெரிக்கர்களை இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளிய இந்தியர்கள்!

இந்தியர்கள் அமெரிக்கர்களைவிட அதிக அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
 | 

அமெரிக்கர்களை இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளிய இந்தியர்கள்!

இந்தியர்கள் அமெரிக்கர்களைவிட அதிக அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சிக்னா என்ற சுகாதார சேவை அமைப்பு  வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர் பற்றிய “வெல் பீயிங் சர்வே” (Well-Being Survey) என்ற ஆய்வை நடத்தியது. பிரேசில், இந்தோனிஷியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, இந்தியா ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் மற்ற நாடுகளைவிட இந்தியர்கள்தான் அதிக அளவு மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 89% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் 18 முதல் 34 வயதுடையவர்கள். தனக்கு பிடித்தப்படி இருக்காமல் போவதும், பண பிரச்னை, வேலை சுமை, சமூக பிரச்னை இதுவே மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP