இந்தியா, உலக நாடுகளுடன் புத்தரின் வழியில் செல்ல விரும்புகிறது - பிரதமர் மோடி

இந்தியா, உலக நாடுகளுடன் புத்தரின் வழியில் செல்ல விரும்புகிறது. யுத்த வழியில் அல்ல என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
 | 

இந்தியா, உலக நாடுகளுடன் புத்தரின் வழியில் செல்ல விரும்புகிறது - பிரதமர் மோடி

"இந்தியா, உலக நாடுகளுடன் புத்தரின் வழியில் செல்ல விரும்புகிறது. யுத்த வழியில் அல்ல" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் பயணம் மேற் கொண்ட பிரதமர், நேற்று ஐக்கிய மாநாட்டில் அதன் பிரதிநிதிகள் அனைவர் முன்னிலையிலும் தனது கருத்துக்களை முன் வைத்தார்.

"பயங்கரவாதம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடியதாக அமையும். இதிலிருந்து விடுபட உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை அழிப்பது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த வேறு சில விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பருவநிலை மாற்றம், எரிபொருள், வறுமை ஒழிப்பு போன்ற சில முக்கிய பிரச்சனைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்காக மட்டும் பேச நான் இங்கே வரவில்லை, உலக நாடுகள் அனைத்தும், உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அது குறித்து கலந்துரையாடுவதற்காக தான் நான் வந்துள்ளேன். மஹாத்மா காந்தி, கௌதம புத்தா, கணியன் பூங்குன்றனார் போன்ற மிகச் சிறந்த தலைவர்களும், மாபெரும் மனிதர்களும் கூறிச் சென்ற வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் நாடான இந்தியா, உலக நாடுகளுடன் புத்தரின் வழியில் செல்ல விரும்புமே தவிர ஒரு நாளும் யுத்த வழியில் செல்ல விரும்பாது" எனக் கூறி, இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்ற கருத்தை அனைவர் மனதிலும் ஆணித்தரமாக பதிய வைத்தார்.

மேலும் இந்திய பிரதமரின் உரையாடலில், எந்த இடத்திலும், எந்த வகையிலும், பாகிஸ்தானை அவர்  குறிப்பிட்டுக் கூறவில்லை. இந்தியாவிற்கு மட்டுமானதாக அவரது உரையாடல் அமையவில்லை. உலக மக்களுக்கான உரையாடலாகவே அவரின் பேச்சு இருந்தது என்று அங்கே இருந்த பிரதிநிதிகள் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP