Logo

சுலபமாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியிலில் 63ஆவது இடத்தைக் கைப்பற்றிய இந்தியா!!

சமீபத்தில், உலக வங்கி வெளியிட்டுள்ள, சுலபமாக வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில், 63வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.
 | 

சுலபமாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியிலில் 63ஆவது இடத்தைக் கைப்பற்றிய  இந்தியா!!

சமீபத்தில், உலக வங்கி வெளியிட்டுள்ள, சுலபமாக வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில், கடந்த ஆண்டை விட 14 இடங்கள் முன்னேறி 63ஆவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது இந்தியா.

சுலபமாக வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டிருக்கும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி, நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. இதில் சீனா 31வது இடமும், கடந்த 2015ஆம் ஆண்டு, 142 இடத்தில் இருந்த இந்தியா தற்போது 63வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த பட்டியலை வெளியிட்ட உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறுகையில், "அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியான கருத்து வேறுபாடு இருப்பினும், வரி வருவாய் மற்றும் வருமானங்களை அதிகரித்ததோடில்லாமல், வேலை வாய்ப்பையும் அதிகரித்துள்ளது சீனா. இவை அனைத்துமே ஒரு நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு தேவைப்படும் மிக முக்கியமான சீர்திருதங்களாகும்.

இந்தியாவை பொறுத்தவரை, முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில், தொடர்ச்சியாக மூன்றாவது முறை இந்தியாவின் பெயர் இடம்பெறுகிறது. புதிதாக ஒரு தொழிலை தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் இந்தியாவில் இடம்பெற்றுள்ளன. இது மிகவும் தனித்துவமான விஷயம்" என்று கூறியுள்ளார்.

எளிதாக வியாபாரம் செய்ய, திறமையான திட்டங்களை மேற்கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற 8 நாடுகள் - சவுதி அரேபியா, ஜோர்டான், டோகோ, பஹ்ரைன், தஜிகிஸ்தான், பாகிஸ்தான், குவைத், மற்றும் நைஜீரியா.

மேலும், உலக வங்கியின் இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகுத்துவரும் நியூசிலாந்தை தொடர்ந்து, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP