இந்தியா - பாகிஸ்தான் போர்: பாக்., அமைச்சர் பகீர்

வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியா - பாகிஸ்தானிடையே முழு வீச்சில் போர் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீர் விவகாரம் தொரடர்பாக தொடர்ந்து பிரச்னை செய்து வரும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்தார். 

இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இந்தியா - பாக்கிஸ்தான் இடையே போர் நடைபெறும் எனவும், அது முழு வீச்சில் இருக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP