Logo

இந்தியா, ஜப்பான், அமெரிக நாடுகளுக்கு இடையேயான கடற்படை பயிற்சி தொடங்கியது!!

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான, "மலபார் 2019" என்று பெயரிப்பட்டுள்ள கடற்படை பயிற்சி, மேற்கு பசிபிக் கடல் பகுதியில், இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.
 | 

நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும், தங்கள் கடற்படை பயிற்சிகள் குறித்தும், பசிபிக் பகுதியில் மேற் கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர். 

இதை தொடர்ந்து, ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான  "மலபார் 2019" என்று பெயரிப்பட்டுள்ள கடற்படை பயிற்சி, மேற்கு பசிபிக் கடல் பகுதியில் இன்று முதல் தொடங்கியுள்ளது.

10 நாட்கள் நடக்கவுள்ள இந்த பயிற்சிக்காக, இந்தியாவிலிருந்து, ஐ.என்.எஸ் சாயத்ரி, ஐ.என்.எஸ் கில்தான், மற்றும் போஸிடான் - 8I ஆகிய மூன்றும் போர்க் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

"மலபார் கடற்படை பயிற்சி" ஒரு முத்தரப்பு பயிற்சியாகும். இதில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும், தற்காலிக உறுப்பினர்களாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உள்ளன.

இந்திய - ஆஸ்திரேலியாவுக்கான இருதரப்பு கடற்படை பயிற்சியான "ஆஸ்-இந்த்-டெக்ஸ்", கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலம் விசாகபட்டினத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP