முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்க இந்தியா தயாராக உள்ளது - நிர்மலா சீதாராமன் 

முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்தியா மிகச் சிறந்த இடமாக இருக்கும் என உறுதியளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
 | 

முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்க இந்தியா தயாராக உள்ளது - நிர்மலா சீதாராமன் 

முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்தியா மிகச் சிறந்த இடமாக இருக்கும் என உறுதியளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

வாஷிங்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் குழு சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சாதாராமன், "பொருளாதார அடிப்படையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடாகவே கருதப்பட்டு வருகின்றது. பொருளாதார வளர்ச்சிக்காகவும், முதலீட்டை அதிகரிப்பதற்காகவும், மத்திய அரசு பல புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது" எனக் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, இந்தியாவின் வெளிப்படைத்தன்மையை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளார் நிதியமைச்சர். 

காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகபட்சமாக முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதை தொடர்ந்து, அதை நீக்குமாறு எழுப்பட்ட கோரிக்கைகளுக்கு, இந்தியா தற்போதுள்ள நிலையில் அதை முற்றிலும் நீக்குவது கடினம் எனவும், மத்திய அரசுடன் கலந்துரையாடி பின் அதுகுறித்து அறிவிப்பதாகவும் நேரடியாக பதிலளித்துள்ளார் நிர்மலா சீதாராமன். 

இந்த கலந்துரையாடலில் பங்குபெற்ற யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப் - ன் தலைவர் முகேஷ் அக்னி, "இந்திய நிதியமைச்சரின் பதில்கள் மிக தெளிவாகவும், நேரடியாகவும் இருந்தன. கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் சில திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாக கூறினார். இந்தியாவில் முதலீடு செய்ய பலரும் தற்போது தயாராகவுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP