Logo

இந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையை தற்போது பின்பற்றுவதில்லை - பிரதமர் மோடி!!!

மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையிலான பயணத்திலிருந்து மாறி வேறு ஓர் புதிய பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 | 

இந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையை தற்போது பின்பற்றுவதில்லை - பிரதமர் மோடி!!!

மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையிலான பயணத்திலிருந்து மாறி வேறு ஓர் புதிய பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தில், ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் 50 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, "தற்போது இந்தியாவில் மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களில் வரிவிதிப்பும் ஒன்று. அதை மேலும் மெருகேற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. வரிகள் செலுத்தும் ஒவ்வொருவரையும் மத்திய அரசு நேசத்துடன் ஆதரிக்க தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார்.

"இந்தியா சமீபகாலமாக மிகபெரும் மாறுதல்களை கண்டு வருகிறது. அந்நிய முதலீடுகள், எளிமையான முறையில் வியாபாரம், எளிமையான வாழ்க்கை முறை மற்றும் உற்பத்தித்திறன் போன்றவை அதிகரித்து வரும் நிலையில், வரி விகிதங்கள், ஊழல்கள் மற்றும் வாரிசு அரசியல் போன்றவைகள் குறைந்து வருகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்று பெற்று பாஜக ஆட்சிக்கு வரும்போது, இந்தியாவின் ஜிடிபி 2 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது. 65 ஆண்டுகள் முடிவில் 2 ட்ரில்லியன் டாலர்களாக இருந்த ஜிடிபி, 5 ஆண்டு பாஜக ஆட்சியில் 3 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல், இந்த 5 ஆண்டுகளில் பல துறைகளில் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ள இந்தியா, தனது வழக்கமான அதிகாரத்துவ முறையிலிருந்து மாறுபட்டு வேறு ஓர் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளின் வளர்ச்சி ; இந்தியாவின் மேம்பாடு சர்வதேச நாடுகளின் மேம்பாடு என்ற விதியை மனதில் வைத்து தான் நாங்கள் முன்னேறி கொண்டிருக்கிறோம் என்றும் இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் உழைப்பது தனக்கு திருப்தியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP