இந்தியாவும், பாகிஸ்தானும் 'உச்சகட்ட கட்டுப்பாடுடன்' நடக்க வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர்

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலை தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நேரத்தில், இருநாடுகளும் அமைதி காக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் குட்டிரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
 | 

இந்தியாவும், பாகிஸ்தானும் 'உச்சகட்ட கட்டுப்பாடுடன்' நடக்க வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர்

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலை தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நேரத்தில், இருநாடுகளும் 'உச்சகட்ட கட்டுப்பாடுடன்' செயல்பட வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் குட்டிரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ் -இ- முஹம்மது  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து குண்டுவீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இரண்டு தரப்பும் 'உச்சகட்ட கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும், என ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டிரெஸ், ஜெனிவாவிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜரிச், "சிறிது நேரத்துக்கு முன்புதான் விமானத்தில் பொதுச்செயலாளர் கிளம்பும் முன், நான் அவரிடம் பேசினேன். அவர், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசு உச்சகட்ட கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடக் கூடாது என்று அவர் கூறினார்" என்றார்.

பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, தங்களுக்கு இதுவரை அதை பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, என்று டுஜரிச் கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP