Logo

இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் நட்பு நிறைந்த நாடுகளாகத் திகழ்கின்றன: டிரம்ப் கிண்டல்!!

நீங்கள் மிகவும் நட்பு நிறைந்த நாட்டை உங்களுக்கு அடுத்த தேசமாக கொண்டிருக்கிறீர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இந்தியாவிடம் அந்த நாடு கொண்டிருக்கும் உறவு குறித்து அமெரிக்க அதிபர் கிண்டல் செய்துள்ளார்.
 | 

இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் நட்பு நிறைந்த நாடுகளாகத் திகழ்கின்றன: டிரம

காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராகத் தான் உள்ளேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் அதுகுறித்து என்னிடம் பேசுகிறீர்கள். அதை இந்தியா என்னிடம் கோராத நிலையில் உங்களுக்கு நான் எவ்வாறு உதவ இயலும். நீங்கள் மோடியிடமே நேரடியாகப் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்குமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உரையாடினர். அதில்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், "காஷ்மீரில் நடப்பது மனித உரிமை அத்துமீறல். அதை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுடன் பேச வேண்டும். இது குறித்து விரிவாக நாங்கள் பின்னர் உரையாட உள்ளோம். உலக நாடுகளில் மிக முக்கிய நாட்டின் தலைவரான ட்ரம்ப், இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கு உதவுவதில் எங்களுக்கு சம்மதமே" எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், "நான் முன்னரே கூறியுள்ளேன். காஷ்மீர் பிரச்னையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவிக்க மேண்டும். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். எனினும், இந்த பிரச்சனையில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென்று இம்ரான் கான் கூறுகிறார்.

ஆனால் இதை இந்தியாவும் தெரிவிக்க வேண்டுமே. அவர்கள் அவ்வாறு கூறாதபோது நான் என்ன செய்ய இயலும். எனவே. நீங்கள் நரேந்திர மோடியுடன் நேரடியாக இந்த விஷயத்தைப் பேசி தீர்த்துக்கொள்வதே, சிறப்பாக இருக்குமென்று நான் கருதுகிறேன் என்று இம்ரானிடம் கூறினார்".

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் காஷ்மீர் குறித்த இந்திய பிரதமரின் ஆக்ரோஷமான பேச்சு எனக்கு வியப்பளித்தது. ஆனால் அந்த அவையில் இருந்த அத்துணை பேரும் அதற்கு பெருத்த கரகோஷத்துடன் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதை நீங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் மிகவும் நட்பு பாராட்டும் தேசத்தை உங்களின் அடுத்த தேசமாக நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்றும் ட்ரம்ப் இம்ரானிடம் கிண்டல் செய்தும் பேசியுள்ளார்

 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP