Logo

ஐரோப்பாவில் "பருவநிலை அவசர சட்டம்" அமல்!!

பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் "பருவநிலை அவசர சட்டம்" தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ஐரோப்பாவில் "பருவநிலை அவசர சட்டம்" அமல்!!

பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் "பருவநிலை அவசர சட்டம்" தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான குழு சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இதுவரை கண்டிராத புது விதமான பருவநிலை அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளது ஐரோப்பா நாடாளுமன்றம். இச்சட்டம் வரும் திங்கள் முதல் அமலுக்கு வரவுள்ளது.

பருவநிலை மாற்றம் சமீப காலங்களில் மிகபெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் நிலையிலும், இரண்டு தினங்கள் முன்பு வெளியிடப்பட்ட ஐ.நா., அறிக்கையின் முடிவு எதிர் மறையாகவே வந்துள்ளது.

இதை தொடர்ந்து, முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்களிலும், விவதாங்களிலிலும் ஈடுபடுவதை விட அவற்றை செயல்படுத்துவதே சிறப்பானது என்பதால், பருவநிலை மாற்றத்திற்கும், இன்ன பிற சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும் எதிராக பருவநிலை அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது ஐரோப்பிய நாடாளுமன்றம். 

இது குறித்து கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதை ஓர் கூட்டு முயற்சியாகவே கருதுவதாகவும், இதற்காக பசுமை இல்லா வாயுக்களை பெரும் அளவு குறைப்பதாக தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், உலக நாடுகளுக்கும் இதனை பற்றிய ஓர் அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் இந்த முயற்சிக்குள் முழுவதுமாக இணைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Newstm.in

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP