கண்ணீர் தேசத்திற்கு எப்படி உதவப் போகிறது இந்தியா? 

இந்தியா மட்டும் அல்லாமல் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகத்தை அறிந்த நாடுகளையும் இணைந்து கொண்டு, இந்தியா களம் இறங்க வேண்டும். கண்ணீர் தேசத்தின் கண்ணீரை துடைப்பது, அவர்கள் அழுகையை நிறுத்த வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. நாமும் கூட அழாமல் இருக்க வேண்டும். மத்திய அரசு யோசிக்குமா?
 | 

கண்ணீர் தேசத்திற்கு எப்படி உதவப் போகிறது இந்தியா? 

இலங்கையின் வடிவம், கண்ணீர் துளி போல அமைந்து விட்டதாலோ என்னவோ, பல ஆண்டுகளாக அந்த மக்கள் கண்ணீரில் தான் வாழ்கின்றனர்.  சிங்களவர்கள் செய்தது சரியா, தவறா, விடுதலைப் புலிகள் நடவடிக்கை சரியா, தவறா என்று ஆராய்ச்சி செய்வதை விட, அந்த நாட்டின் சிறுவர், சிறுமியர் பட்ட துன்பம், அப்பாவிகள் வீடு இழந்து வாசல் இழந்து, உலகம் முழுவதும் ஓடிச் சென்று, இன்று சிறிது சிறிதாக நீர்க்குமிழிபோல சந்தோஷத்தில் வாழும் வாழ்க்கையை, நாமே வாழ்ந்து பார்த்தால் மட்டும் தான் அவர்களின் வேதனையை உணர முடியும். 
 
வானில் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உள்ளே பொறி பொறி என அலறியபடி குழந்தைகள் கட்டிலுக்கு அடியில் மறையும் சோகம், எத்தனை வார்த்தைகளால் வர்ணித்தாலும் உணர வைக்க முடியாது. இந்த கண்ணீர் தேசத்தில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், அமைதி திரும்பி இருந்தது. 

கண்ணீர் தேசத்திற்கு எப்படி உதவப் போகிறது இந்தியா? 

இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியால் அந்த நாட்டில் வாழ்கிறவர்கள், பயம் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். 
அந்த குருவி கூட்டுக்குள், பயங்கரவாதிகள் குண்டு வீசியதில் பலர் இறந்து இருக்கிறார்கள். உயிர்த்தெழுந்த ஏசுவின் முன்னால், 200க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். ஏசுவே எங்களை காப்பாற்றும் என்று கண்மூடி ஜெபித்தவர்கள், கண்களை திறக்காமலேயே மரணத்தை தழுவி இருக்கிறார்கள். 

தெற்காசியாவின் குட்டி தேசத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டிய மிகப் பெரிய கடமை மட்டும் அல்லாமல் கட்டாயமும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு கை கொடுக்க இந்தியா தயங்கும் என்றால், இந்தியாவால் ஏற்பட்ட காலி இடத்தை சீனா நிரப்பிக் கொள்ளும். 

இந்த சம்பவத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் இயல்பாக ஏற்படுகிறது. பலவிஷயங்களில், பாகிஸ்தானை பாதுகாக்கும் சீனாவிற்கு கைமாறாக, அந்த தேசம் உள்ளூர் பயங்கரவாதிகளை துாண்டி விட்டு இந்த சம்பவத்தை நடத்தி இருக்கலாம். 

கண்ணீர் தேசத்திற்கு எப்படி உதவப் போகிறது இந்தியா? 

சீனா, இலங்கையை பாதுகாக்கிறேன் என்று களம் இறங்கினால், அவர்களால் இந்தியாவிற்கு நேரடியாக மிரட்டல்கள் வரலாம். அல்லது இலங்கையில் தீவிரவாத செயல்களை செய்த பயங்கரவாதிகள் சில மணி நேரத்தில் இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் ஒதுங்கிவிடுவார்கள். 

நாமும் கூட தொப்புள் கொடி உறவு என்பது போல எதையாவது சொல்லி, அவர்களை உள்ளே அனுமதிப்போம், அதனால் இங்கே சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு அதிகம். பிரதமர் மோடி போன்றவர்கள் இருந்தால் கூட எதிரிநாடுகள் தாக்குதல் நடத்த பயப்படும். 

சிவகங்கையில் ஊழல் வேட்பாளரை கூட மாற்றி அமைக்க தைரியம் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால், தீவிரவாதிகள் கொட்டம் எவ்விதமான தடைகளும் இல்லாமல் தொடரும். நாமும் கூட முள்ளிவாய்க்கால் பிரச்னையின் போது, இலங்கையில் பற்றி எரிந்த போது, மவுனசாமியார்களாக மத்திய, மாநில அரசுகள் இருந்தது அல்லவா அதே நிலை ஏற்படலாம். 

அதன் காரணமாக இந்தியாவில் தேர்தல் முடிவதற்கு முன்பாகவே, உதவிகளை தொடங்க வேண்டும். அது பயங்கரவாதத்திற்கு எதிரான போராக கூட இருக்கலாம். அப்படி போராக இருந்தால், இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும். ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியது போன்ற நிலை ஏற்பட்டால், தமிழகத்திலும் எதிர்ப்பபை சந்திக்க வேண்டி வரும். 

எப்படி இருந்தாலும், ஒரு சில நாட்களிலேயே இந்தியா நடவடிக்கையை தொடங்குவது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும். முதற்கட்டமாக ஒரு குழுவை அனுப்பி, அங்கு தேவையானவற்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை தொடக்க வேண்டும். 

இந்த தாக்குதலுக்கு, இதுவரை யாரும் பொறுப்பேற்காமல் இருந்த நிலையில், சர்வதேச பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியா மட்டும் அல்லாமல் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகத்தை அறிந்த நாடுகளையும் இணைந்து கொண்டு, இந்தியா களம் இறங்க வேண்டும். கண்ணீர் தேசத்தின் கண்ணீரை துடைப்பது, அவர்கள் அழுகையை நிறுத்த வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. நாமும் கூட அழாமல் இருக்க வேண்டும். மத்திய அரசு யோசிக்குமா?

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP