பணக்காரர்கள் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம்

பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது.
 | 

பணக்காரர்கள் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம்

பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது.

உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை வெல்த் எக்ஸ் என்கிற நிறுவனம் நடத்தியுள்ளது. குறைந்தது 216கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டவர்களை மிகப்பெரும் பணக்காரர்கள் எனக்கொண்டு கணக்கிட்டுள்ளது. முந்தைய பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியும் இப்போது சீனக் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஹாங்காங்கில் பத்தாயிரம் பெரும் பணக்காரர்கள் வாழ்கின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒன்பதாயிரம் பெரும் பணக்காரர்கள் உள்ளனர். பெரும்பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களில் மூன்றாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளது. நான்காமிடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசும், ஐந்தாமிடத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டனும் உள்ளன. இதன் மூலம் நியூயார்க் நகரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹாங்காங் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP