பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு- ஐநா ஆய்வில் தகவல்

கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடே பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் குறிப்பிட்டுள்ளது.
 | 

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு- ஐநா ஆய்வில் தகவல்

பெண்களுக்கு தங்கள் வீடே மிகவும் ஆபத்தான இடம் என்று ஐ.நா ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை பெண்களிடம்தான் உள்ளது. பெண்கள் வீட்டின் கண்கள், பெண்கள்தான் குடும்ப குத்துவிளக்கு என சொல்லிக்கொண்டிருந்த காலங்கள் மறைந்து இன்று குடும்பத்தை நிர்வகிப்பதற்காக வேலைக்கு செல்லவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, அலுவலகத்தில் பிரச்னை, ஆணவக் கொலை, காதலால் தற்கொலை மற்றும் கொலை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகம் மரணிக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 25-ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பெண்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நடந்த வன்முறைகள் குறித்த அறிக்கையை ஐ.நா.வின் போதை பொருள் மற்றும் குற்றப்பிரிவு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடே பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் வீட்டினுள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP