யுத்தவெறி பிடித்தவர் ஹிலாரி - வார்த்தைகளால் விலாசிய துளசி கப்பார்ட்!!!

அமெரிக்காவில், ஒபாமா அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய ஹிலாரி கிளண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக கட்சியின் பிரிதிநிதியான துளசி கப்பார்டை ரஷ்யாவின் ஆதரவினால் தான் அரசியலில் அவர் நிலைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, அதற்கு தனது ட்விட்டர் பதிவு மூலம் பதிலளித்த துள்சி, ஹிலாரியை வெளுத்து வாங்கியுள்ளார்.
 | 

யுத்தவெறி பிடித்தவர் ஹிலாரி - வார்த்தைகளால் விலாசிய துளசி கப்பார்ட்!!!

அமெரிக்காவில், ஒபாமா அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய ஹிலாரி கிளண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக கட்சியின் பிரிதிநிதியான துள்சி கப்பார்டை ரஷ்யாவின் ஆதரவினால் தான் அரசியலில் அவர் நிலைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, அதற்கு தனது ட்விட்டர் பதிவு மூலம் பதிலளித்த துள்சி, ஹிலாரியை வெளுத்து வாங்கியுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய பெண் அரசியல் தலைவர்களுல் ஒருவரான ஹிலாரி கிளண்டன், கடந்த 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் மேலவை உறுப்பினராக பணியாற்றினார். பின்னர், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ட்ரம்ப்பிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

அமெரிக்க இந்திய வம்சாவளியை சேர்ந்த டெமாக்ரடிக் கட்சியின் பிரிதிநிதியான துளசி கப்பார்ட், வரும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடவுள்ளார். 

இந்நிலையில், மக்களாட்சிக் கட்சியின் தலைவர் ஹிலாரி கிளிண்டன், துளசி கப்பார்ட்டின் நம்பிக்கைக்கு ரஷ்யா அவருக்கு அளிக்கும் ஆதரவு தான் காரணம் எனவும், ரஷ்யாவுக்கு மிகவும் பிடித்த நபர் துளசி என்றும் குறிப்பிட்டிருந்தார். ஹிலாரியின் இந்த கருத்துக்களுக்கு தன் ட்விட்டர் பதிவு மூலம் பதிலளித்துள்ளார் துளசி கப்பார்ட்.

 

 

"அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக நான் அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து, எனது பெயரை கெடுக்க வேண்டும் என்று யாரோ தீவிரமாக உழைத்து வந்த நிலையில், தற்போது அதற்கு யார் காரணம் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. உங்களை போன்ற யுத்தவெறி பிடித்தவர் நான் இல்லை. என்னிடம் மோத வேண்டும் என்றால் நேரடியாக மோதுங்கள். இப்படி மறைமுகமாக மோதும் உங்களுக்கு என்னை நீரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க மீடியாக்கள் துளசி கப்பார்ட்டை குறித்து பல செய்திகள் வெளியிடுவதில்லை என்றாலும், கணிசமான முறையில்,  அவருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP