ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமை ரத்து - சவூதி அரேபியா அதிரடி!

ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை சவூதி அரேபியா ரத்து செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, அந்நாட்டு அரசிதழில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர் இப்போது எங்குவுள்ளார் என்பது ரகசியமாக உள்ளது.
 | 

ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமை ரத்து - சவூதி அரேபியா அதிரடி!

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை சவூதி அரேபிய அரசு ரத்து செய்துள்ளது. இவர் அல்-கொய்தா இயக்கத்தின் அடுத்த தலைவராக வளர்ந்து வருகிறார் என்றும், ஜிகாத் போரின் ‘பட்டத்து இளவரசர்’ என்றும் அமெரிக்காவால் வர்ணிக்கப்படுபவர் ஆவார். ஹம்ஸாவுக்கு 30 வயது ஆகிறது.

சவூதி அரேபியாவை தாய்நாடாகக் கொண்ட ஒசாமா பின்லேடனின் தலைமையில் அல்-கொய்தா இயக்கம் செயல்பட்டு வந்தது. அந்த இயக்கத்தினர் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை கடந்த 2011ம் ஆண்டில் தகர்த்தனர். அதிலிருந்து 10 ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தானில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து ஒசாமா பின்லேடை அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமை ரத்து - சவூதி அரேபியா அதிரடி!

பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவரது மகன் ஹம்ஸா பின்லேடன் மிரட்டல் விடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது. மேலும், அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.7.08 கோடி (10 லட்சம் டாலர்கள்) பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்தது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற ஏதேனும் ஒரு நாட்டில் ஹம்ஸா பின்லேடன் பதுங்கியிருக்கலாம் என்றும், ஈரானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் கருதுகின்றன. இந்நிலையில், ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை சவூதி அரேபியா ரத்து செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, அந்நாட்டு அரசிதழில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வளைகுடா போரின்போது அமெரிக்க படையினருக்கு சவூதி அரேபியா இடம் அளித்ததை ஒசாமா பின்லேடன் கடுமையாக எதிர்த்தார். இதைத்தொடர்ந்து அவரது குடியுரிமையை சவூதி அரேபியா கடந்த 1994ம் ஆண்டில் ரத்து செய்தது. பின்னர், சூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தபடி தீவிரவாத நடவடிக்கைகளை தொடர்ந்த அவர், இறுதியாக பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP