5 கோடி பேரின் ஃபேஸ்புக் அக்கவுண்டை சூறையாடிய ஹேக்கர்கள்

சமூக ஊடகங்களில் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்துவது ஃபேஸ்புக். இணைய நட்பை வளர்ப்பதோடு, சமூகப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கவும் மக்கள் இதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இது ஹேக் செய்யப்பட்டுள்ளது
 | 

5 கோடி பேரின் ஃபேஸ்புக் அக்கவுண்டை சூறையாடிய ஹேக்கர்கள்

பிரபலமான சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப் பட்டுள்ளன. 

சமூக ஊடகங்களில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்துவது ஃபேஸ்புக். இணைய நட்பை வளர்ப்பதோடு, சமூகப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கவும் மக்கள் இதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். 

எளிமையான முறையில் கையாளலாம் என்பதால் இதற்கு பயனர்கள் மத்தியில் மவுஸ் அதிகம். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் ஃபேஸ்புக்கின் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் பாதுகாப்பு குறைப்பாட்டால், சுமார் 5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 கோடி  பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் கூறுகையில், "இக்குறைபாட்டை பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25ம் தேதி மாலை கண்டறிந்தனர். இதனை சரிசெய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர், பேஸ்புக்கில் உள்ள வியூ அஸ் ( View As) என்ற வசதியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. எனவே தற்காலிகமாக இது செயல்படாது" என்றார்

5 கோடி பேரின் ஃபேஸ்புக் அக்கவுண்டை சூறையாடிய ஹேக்கர்கள்

ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வழி

நமது செல்போனிலோ, கணினியிலோ முதன்முறையாக லாக் இன் செய்யும் போது கடவுச்சொல்லை சேமிக்கவும் (Save Password) என்ற ஆப்ஷனை கிளிக் செய்வோம், இதனால் அடுத்த முறை லாக் இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேட்காது.

ஆனால் ஒருவேளை உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது.

லாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும், அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.

எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்து கொள்ளலாம்.

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP