காதுகேளாதவர்களையும் திரும்பி பார்க்கவைத்தவரை கெளரவித்த கூகுள்! 

காதுகேளாதவர்களுக்கு குறியீட்டு எழுத்துக்களை உருவாக்கிய சார்லஸ்-ன் 306-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரை கூகுள் தமது முகப்புப் பக்கத்தில் வைத்து டூடுள் வடிவமைத்து கவுரவித்துள்ளது.
 | 

காதுகேளாதவர்களையும் திரும்பி பார்க்கவைத்தவரை கெளரவித்த கூகுள்! 

காதுகேளாதவர்களுக்கு குறியீட்டு எழுத்துக்களை உருவாக்கிய சார்லஸ்-ன் 306-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரை கூகுள் தமது முகப்புப் பக்கத்தின் மூலம் கவுரவித்துள்ளது. 

சார்லஸ்-மிசெல் டி ஐயெபீ என்பவர் தமது வாழ்க்கையை ஏழை மற்றும் காதுகேளாத குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணித்தவர். பிரான்சில் முதன்முறையாக காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான கல்வி மையத்தை உருவாக்கினார். அவர்கள் குறியீடு மூலம் பேசுவதை கை அசைவுகளின் வேறுபாடுகளைக் கொண்ட ஆல்ஃபாபெட்களாக வடிவமைத்தார். சாதாரண குழந்தைகள் காதால் கேட்டுப் பயில்வதை, சிறப்புக் குழந்தைகளுக்கு கண்ணால் கண்டு கற்கும் முறையை உருவாக்கியவர். இது, உலகளவில் வாய் பேசமுடியாத, காது கேளாத குழந்தைகளுக்கும் கல்வியறிவு கிடைக்கும் வகையில் முக்கிய திருப்பமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP