Logo

'குட் மார்னிங் ஹூஸ்டன்' : பிரதமர் மோடி உற்சாக பேச்சு 

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹௌடி மோடி நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை புரிந்தார். அவருடன் பிரதமர் மோடியும் உடன் வந்தார். இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தன் உரையை துவங்கினார்.
 | 

ஹௌடி மோடி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: "குட் மார்னிங் ஹூஸ்டன், டெக்சாஸ், அமெரிக்கா. இங்கிருக்கும் மற்றும் உலகெங்கும் வசிக்கும் இந்தியர்களுக்கு என் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் நபருக்கு உங்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லை.

இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பை இன்முகத்துடன் வரவேற்கிறேன். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் அதிபர் டிரம்ப் அதிகம் படுபட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் உண்மையான நண்பன் இந்தியா என்பதை அவர் என்னிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அவர் தலைமையில், அமெரிக்கா மேலும் வளர்ச்சி பெற விரும்புகிறேன். 

ஹோஸ்டனில் இருந்து ஹைதராபாத் என இங்குள்ள பல நகரங்களில் இருந்து இந்தியாவின் பல நகரங்களிடையே தொடர்பு உள்ளது. வரும் நாட்களில் இது மேலும் வலுப்படும். 2017ல், உங்கள் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்தீர்கள் டிரம்ப் அவர்களே. இன்று இங்கு குழுமியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் என் குடும்பத்தாரே. என் குடும்பத்தை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். 

அமெரிக்காவின் மிக சிறந்த அதிபர் டிரம்ப் அவர்களை இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற அழைக்கிறேன்" என மோடி பேசினார். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP