Logo

கில்கிட்- பால்டிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதி: எச்.செரிங்

காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என சர்வதேச நீதிமன்றங்களில் பாகிஸ்தான் பொய் கூறிவரும் நிலையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கில்கிட்- பால்டிஸ்தான் பிராந்தியத்தின் ஆர்வலர், இப்பகுதி இந்தியாவின் ஒரு பகுதி என ஐ.நா சபையில் தெரிவித்துள்ளார்.
 | 

ஐக்கிய நாடுகளின் 42வது மனித உரிமைகள் பேரவை கூட்டம் ஜெனீவாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கில்கிட்- பால்டிஸ்தான் பிராந்தியத்தை சேர்ந்த ஆர்வலரும், வாஷிங்டன்-ல் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநருமான செங்கே எச்.செரிங் கூறியதாவது:- கில்கிட்-பால்டிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும். கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஒரு பெரிய தடுமாறலாக மாறியுள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் உணர வேண்டும் என கூறினார்.

மேலும், கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி மற்றும் காஷ்மீர் மக்களுடன் ஒற்றுமையுடன் இருப்பது போன்று இஸ்லாமாபாத் நடிப்பதாகவும், ஆனால் உலகம், குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள், ஜம்மு- காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துவதையும், துஷ்பிரயோகம் செய்து வருவதையும், அறிந்துள்ளனர் என தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP