பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் சந்திப்பு!!

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், இன்று பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பில் 11 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 | 

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் சந்திப்பு!!

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், இன்று பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பில், 5 ஒப்பந்தங்கள் மற்றும் 11 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், நேற்று (வியாழன்) இரவு, இந்தியாவின் தலைநகரமான டெல்லி வந்தடைந்ததை தொடர்ந்து, இன்று காலை ராஷ்டிரபதி பவனில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இவர்களின் சந்திப்பின் போது, இரு நாடுகளின் வளர்ச்சி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் வேலை வாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம் என்பது போன்ற 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதை தொடர்ந்து, தற்போது கிடைத்துள்ள செய்தியின் படி, இரு நாட்டின் தலைவர்களும், டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் வைத்து 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், மருத்துவம், கல்வி, விண்வெளி ஆராய்ச்சி, விமான போக்குவரத்து, கடல்வழி தொழில்நுட்பம் உள்ளிட்ட 11 உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி, "இருநாடுகளின் வளர்ச்சிக்காகவே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. புதிய வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, திறன்கள், கல்வி, இணைய வழி பாதுகாப்பு போன்ற ஒப்பந்தங்கள் இருநாடுகளின் மேம்பாட்டிற்கும் மிகப்பெரிய அளவில் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய கணக்கின்படி, ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உள்ள நிலையில், அதை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்திய மாணவர்கள் மட்டுமல்லாத இந்திய ஆசிர்யர்களும் ஜெர்மனிக்கு வரவேண்டும் என்று கூறி இந்தியாவுடனான தனது நட்பை உணர்த்தியுள்ளார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP